Circles Theme

  
  • உறுப்பினர் பதிவு
  • புகுபதிவு
  • கேள்விகளும் பதில்களும்
  • Facebook
  • Google+
  • LinkedIn
  • RSS
  • Twitter
  • YouTube
Circles Theme
  • முகப்பு
    • வரலாறு
    • துளசி ஓர் அற்புதம்
    • துளசியின் தனித்துவம்
    • துளசி அறிவியல்
    • 4G நோக்கமும், செயல்பாடுகளும்
    • பேண்தகைமை
    • சான்றுகள்
    • மைல்கற்கள்
  • துளசி வழி வாழ்க்கை
  • உலக பசுமை வளர்ச்சி குழு
    • சுருக்கமாக ஆங்கிலத்தில்
    • சுருக்கமாக - தமிழில்
    • பசுமை துளசி சங்கம்
  • 4G துளசி
    • 4G - e - புத்தகங்கள்
    • 4G - e - கையடக்க புத்தகம்
    • 4G - e - துண்டு பிரசுரம்
    • 4G - துளசி e சுவரொட்டிகள்
    • கையடக்க ஆவண வடிவம்
    • புத்தக காதலன்
  • குறுஞ்செய்திகள்
    • நிறுவனரின் வாரந்திர குறுஞ்செய்திகள்
    • நிறுவனரின் மாதாந்திர குறுஞ்செய்திகள்
    • இ - செய்திகள்
  • கொள்கைகள்
    • பாதுகாப்பு கொள்கை
    • கொள்கைகளின் தொகுப்பு
    • நம்பகமான கொள்கை
  • தொடர்புக்கு

துளசி கையடக்க புத்தகம்

Home | துளசி கையடக்க புத்தகம்

துளசி...துளசி - 24 பக்க புத்தகம்:

உடல் ஆரோக்கியத்திற்க்கு துளசி
உள்ள ஆரோக்கியத்திற்க்கு துளசி
உலக ஆரோக்கியத்திற்க்கு துளசி

துளசிசெடி மட்டும்தான் இந்த பூமியில் ஒரு நாளில் 20 மணி நேரம் ஆக்கிஜன் மற்றும் 4 மணி நேரம் ஓசோன் கொடுக்கும் ஒரே அரிய தாவரம்.

உயிர் காற்று....மூச்சுக் காற்று:

இந்த உலகில் திட உணவை சாப்பிடாமல் ஒருவர் 15 நாள் வரை கூட உயிர் வாழ முடியும் !
இந்த உலகத்தில் தண்ணீர் பருகாமல் ஒருவர் 5 நாள் வரை கூட உயிர் வாழ முடியும் !!
ஆனால், காற்று இல்லாமல், மூச்சு விடாமல் ஐந்து நிமிடங்கள் கூட ஒருவர் உயிர் வாழ முடியாது !!!

  • + -

    மேலும்...


    பிராண வாயு:

    ஆகையால் தான் நான் அத்தகைய மூச்சு காற்றை "பிராண வாயு" என்று அழைக்கிறோம். "பிராண்" என்றால் உயிர் பிராணவாயு என்றால் உயிர் மூச்சு காற்று என்று பொருள்.

    CO2 அசுத்த காற்று

    அத்தகைய மனித உயிர் காற்று...மூச்சுக் காற்று இன்று நாம் அடைந்துள்ள விஞ்ஞான முன்னேற்றத்தின் விளைவாக நாம் அனுபவிக்கும் பல செளகரியமான பொருட்களின் மின்சார பயன்பாடு மற்றும் பல பெரிய தொழிற்சாலைப் பெருக்கத்தினால் அவைகள் வெளியிடும் கரிய-மில-வாயுகளின் காரணங்களால் அசுத்த காற்றாக மாறிவிட்டது.

    காற்றில் கலந்துள்ள வாயு மூலங்கள்:

    நைட்ரஜன் - 78.08%
    ஆக்சிஜன் - 20.095%
    ஆர்கான் - 0.93%
    கார்பன்-டை-ஆக்சைடு - 0.03%
    நியான் - 0.0018% ஹீலியம் - 0.0005%

    CO2 வின் சமநிலையிலிருந்து...சமனற்ற நிலை பயணம்:

    1988ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை இந்த பூமியில் கரிய-மில-வாயு அளவு இருக்க வேண்டிய சமநிலையான் 350 PPM க்கு மேற்பட்ட குறிப்பிட்ட அளவு கரியமில வாயு அடைந்தது.

    உலக கருப்பு தினம்:

    உலகம் தினம், தினம் சூடாகிக் கொண்டே இருக்கிறது...இதைப் பார்த்துக் கொண்டே நாம் குளிர் காயலாமா ?
    மெய் அன்பர்களே...உலக சிந்தனையாளர்களே,

    உயிர்காற்று...மூச்சுக்காற்று...

    இந்த உலகில் திட உணவை சாப்பிடாமல் ஒருவர் 15 நாள் வரை கூட உயிர் வாழ முடியும் ! இந்த உலகத்தில் தண்ணீர் பருகாமல் ஒருவர் 5 நாள் வரை கூட உயிர் வாழ் முடியும்!! ஆனால், காற்று இல்லாமல், மூச்சு விடாமல் ஐந்து நிமிடங்கள் கூட ஒருவர் உயிர் வாழ் முடியாது ! ! ! அத்தகைய மூச்சுகாற்று, இன்று நாம் அடைந்துள்ள விஞ்ஞான முன்னேற்றத்தின் விளைவாக, நாம் அனுபவிக்கும் பல சௌகரியமாக பொருட்களின் பயன்பாடு மற்றும் பல பெரிய தொழிற்சாலைப் பெருக்கத்தின் காரணங்களால் அசுத்தக்காற்றாக் மாறிவிட்டது.

    நாம் சுவாசிக்க வேண்டிய ஆரோக்கிய காற்றில்...350PPM (Parts Per Million) CO2 (கரியமில வாயு) இருக்க வேண்டும். நாம் இன்று சுவாசிக்கும் அசுத்தக்காற்றில்... 394PPM (Parts Per Million) CO2 (கரியமில வாயு) இருக்கிறது.

    ஒரு மனிதர் சராசரியாக ஒரு நாளைக்கு 26,000 முறை மூச்சு இழுக்கிறார். நாள் ஒன்றுக்குத் தேவைப்படும் ஆக்ஸிஜன் அளவு 14 கிலோ கிராம் ஆகும். சுத்தமான காற்றில் 78.09 விழுக்காடு நைட்ரஜனும், 20.94 விழுக்காடு ஆக்ஸிஜனும் இருக்கின்றது. கார்பன்டை ஆக்சைடு எனப்படும் கரியமில வாயு 0.03 விழுக்காடு உள்ளது. மேலும் ஆர்கான், நியான், கிரிப்டான், செனான், ரேடான், ëலியம், மீத்தேன் போன்ற வாயுக்களும் குறைந்த அளவில் காற்றில் கலந்துள்ளன. பலவிதமான வாயுக்கள் பூமியைச் சூழ்ந்து போர்த்திக்கொண்டு இருக்கின்றன. இதற்குத்தான் வளி மண்டலம் (Atmosphere) என்று பெயர்.

    பூமியைச் சுற்றியுள்ள பகுதி அடி வளிமண்டலமாகும். இது பூமியின் பரப்பளவில் இருந்து செங்குத்தாக 11 கி.மீ வரை இருக்கிறது. 11கி.மீ தூரத்திலிருந்து 50கி.மீ வரை இருப்பது மீவெளி மண்டலம். 30 கி.மீ தூரத்திலிருந்து 80கி.மீ வரை இடைவெளி மண்டலம். 80கி.மீ உயரத்திற்கு மேல் இருப்பது வெப்ப வெளி மண்டலம். பூமிக்கு 120கி.மீ உயரம் வரை வளி மண்டலமாக இருக்கிறது. இந்த வளிமண்டலம் வாயுக்களால் நிரம்பிஉள்ளது. பூமியிலிருந்து 11கி.மீ உயரத்திலேயே, வளி மண்டலத்தில் 5 குவின்டில்லியன் கிலோ எடையுள்ள(ஒரு குவின்டில்லியன் = 1&19பூஜ்ஜியங்கள்) (அதாவது ஒன்றுக் குப் பின் 19 பூஜ்ஜியங்கள்) வாயுக்கள் இருக்கின்றன. அதற்கு மேலே போகப் போக வாயுக்களின் அளவு குறைந்து கொண்டே போகிறது. அந்த வாயுக்களில் 78 விழுக்காடு மனிதர்கள் சுவாசிக்கத் தேவையான ஆச்சிஜன், 0.038 விழுக்காடு கார்பன்டை ஆக்சைட் இருக்கிறது. இந்த கார்பன் டை ஆக்சைட் எனப்படும் கரியமில வாயு, அளவு வளிமண்டலத்தில் கூடிக் கொண்டே போவதால்தான் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கிறது. அது எவ்வாறு என்பதைக் காண்போம்.

    சூரியனிலிருந்து பூமிக்கு வெளிச்சமும் அதனுடன் சேர்ந்து வெப்பமும் வருகின்றது. சூரியன் பூமியை விட அளவில் 109மடங்கு பெரியது. ஆனால், அங்கு ஆக்சிஜன் குறைவு. பூமி, சூரியனிடமிருந்து சுமார் 15கோடி கி.மீ தொலைவு(அப்பாடா!) தள்ளிதான் இருக்கிறது. ஆனால் என்ன விந்தை தெரியுமா? சூரியனிடமிருந்து புறப்படும் ஒளி, பூமிக்கு 8 நிமிடம் 19நொடிகளில் வந்து சேர்ந்து விடுகிறது. என்னே, இயற்கையின் ஆற்றல்!

    சூரிய ஒளி கிரணங்கள்தான் பூமியில் உயிர்களை வாழ வைக்கின்றன

    ஆனால், சூரிய ஒளி சக்தி முழுவதும் பூமிக்கு வந்துவிடுவது இல்லை. மொத்த சூரிய சக்தியும் வெப்பமும் பூமியில் விழுந்தால் கருகி சாம்பல் ஆகிவிடுவோம். அப்படி ஆகிவிடாமல் சூரிய ஒளியைத் தடுத்தாட்கொண்டு, வளிமண்டலம் நம்மைப் பாதுகாக்கிறது. வளிமண்டலம் தடுக்கும் வெப்பம் போக மீதிதான் பூமிக்கு வருகின்றது. ஆனால், பூமியோ, தன் மீது விழும் சூரிய சக்தியை மீண்டும் விண்வெளிக்கே திருப்பி அனுப்ப முயல்கிறது. ஆனால், வளிமண்டலத்தில் உள்ள சில வாயுக்கள் வெளியே செல்லும் அந்த சக்தியை விண்வெளிக்கு செல்லவிடாமல் தடுக்கின்றன( Green house gases) என்று பெயர். “பசுங்குடில் வாயுக்கள்” என்று பெயர் வரக்காரணம், ஒரு சிறிய குடில்(Shed) போன்று, கண்ணாடியால் கூரை அமைக்கப்பட்டு வெப்பம் வெளியேறிவிடாமல் தடுத்து, அந்தக் குடியில் தாவர ஆராய்ச்சிகள் செய்வார்கள். இதனை பசுங்குடில்(Green house) என்று அழைப்பர். அதைப் போலவே வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள், கண்ணாடிக் கூரை போன்றே வெப்பம் வெளியேறிவிடாமல் தடுப்பதால் அவற்றுக்கு “பசுங்குடில் வாயுக்கள்” என்று பெயர். பூமியிலிருந்து திருப்பி அனுப்பப்படும் வெப்பத்தை அண்டவெளிக்குள் கடத்தாமல், அதனை தடை செய்து பூமிக்கு மேலே போர்வை போல நிலைகொள்ளச் செய்கிறது. பசுங்குடில் வாயுக்களால் ஏற்படும் இந்த வினைக்கு‘பசுங்குடில் விளைவு’ (Green House Effect ) என்று பெயர்.

    பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதற்கு இந்தப் பசுங்குடில் வாயுக்கள் காரணம். வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைட் (CO2), நைட்ரஸ் ஆக்சைட் (N2O), மீத்தேன் (CH4), குளோரா புளோரா கார்பன் (CHF) ஆகிய வாயுக்கள் தான் பழங்குடில் வாயுக்கள் ஆகும். இவ்வாயுக்களின் மூலக்கூறுகள் சூரிய ஒளியின் நீள அலைவரிசை ஒளிக் கற்றைகளை ஈர்த்து தன்னகத்தே உள்வாங்கிக் கொண்டு, வெப்பத்தைத் தேக்கி வைப்பதால், வாயுமண்டலம் வெப்பமாகிறது. இதன் விளைவாக, பூமியின் வெப்பநிலை அதிகரிக்கிறது. இதற்குத்தான் ‘புவி வெப்பமயம்’( Global Warming ) என்று பெயர். புவி எவ்வாறு வெப்பமயமாகிறது என்பதற்கு முன்பு, பசுங்கூட வாயுக்கள் பற்றி சிறிது காண்போம்.

    கரியமில வாயு (CO2)

    கார்பன்டை ஆக்சைட் எனப்படும் இந்தக் கரியமில வாயுதான் பூமியை வெப்பமடையச் செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. தற்போது கரியமில வாயு, காற்று மண்டலத்தில் அதிகரித்துக் கொண்டே போவதுதான் பிரச்சினை, 1957ல் 350 ppm (parts per million) அளவாக இருந்த கார்பன் அளவு 2000 ஆண்டில் 400 ppm அளவாக அதிகரித்தது.

    தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்னர், அதாவது 18ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலம்வரை நமது வளிமண்டலத்தில் இருந்த கார்பனின் அளவு 280 ppm மட்டுமே. அதாவது பத்துலட்சத்தில் 280 பங்காக இருந்தது. புவியின் வெப்பநிலை அதிகமாகாமல் இருக்க வேண்டுமானால், கார்பன் அளவு 350 ppm அளவுக்குள் இருக்கவேண்டும். ஆனால், தொழிற்சாலைகள் வெளி ஏற்றும் புகை, போக்குவரத்து வாகனங்கள் வெளியிடும் புகை, நிலக்கரி, பெட்ரோல் போன்றவை எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை ஆகியவற்றால் வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்சைட் அளவு கூடிக்கொண்டே போகிறது.

    இதே நிலை தொடருமானால், 2100ஆம் ஆண்டில், காற்று மண்டலத்தில் கார்பனின் அளவு 540முதல் 970 ppm அளவு உயர்ந்துவிடும். அவ்வாறு நேர்ந்தால் பூமிக்கு ஏற்படும் அழிவை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. கரியமில வாயு அதிகரிக்க அதிகரிக்க புவியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே போகும். மொத்த வாயு மண்டலத்தில் வெறும் 0.03விழுக்காடு மட்டுமே உள்ள கரியமிலவாயு, பசுங்குடில் வாயுக்களில் 63.5 விழுக்காடாக உள்ளது. ஆகவே அகிலம் இன்று சந்திக்க வேண்டிய முக்கிய சவால், இந்தக் கரியமிலவாயு எவ்வாறு கட்டுப்படுத்தப்பட வேண்டும்? என்பதே.

    மனிதன் மற்றும் விலங்கினங்கள் சுவாசித்தலின்போது கார்பன் டை ஆக்சைடை தொடர்ந்து வெளியிட்டு வந்தாலும், தாவரங்கள் பெருமளவு தங்களின் ஒளிச்சேர்க்கையின் உணவு தயாரிக்கும்போது கார்பன்டை ஆக்சைடை எடுத்துக் கொள்கின்றன. அதனால் கார்பனின் அளவு வளி மண்டலத்தில் ஓரளவு சமன்பாட்டுடன் இருந்து வந்தது. பல இலட்சம் ஆண்டுகளாக தாவரங்கள் சேமித்து வைத்து புதையுண்ட கார்பன்கள்தான் நிலக்கரியாகவும், பெட்ரோலியப் பொருட்களாகவும், நமக்கு எரி பொருள்களாகப் பயன்பட்டு வருகின்றன.

    கடந்த நான்கு லட்சம் ஆண்டுகளாக கார்பனின் அளவு 280 ppm அளவை தாண்டாமல் சற்றேறக் குறைய சமஅளவில் இருந்து வந்தது. ஆனால், நாடுகள் தொழில் மயமாக ஆரம்பித்த பின்னர் கார்பன் டை ஆக்சைட் காற்றுமண்டலத்தில் அதிகரிக்கத் தொடங்கி, தற்போது 400 ppm அளவுக்கு உயர்ந்து விட்டது. இதன் விளைவாக புவியின் சராசரி வெப்பநிலை 15டிகிரி செல்சியஸ் அளவிலிருந்து மேலும் 6டிகிரி செல்சியஸ் வரை உயரும் அபாயம் உள்ளது என்று IPCC, (Inter Government Panel on Climate Change) பருவநிலை மாறுபாடு குறித்து ஆராயும் அரசாங்கங்களுக்கிடையிலான குழு, 2007இல் வெளியிட்ட அறிக்கை எச்சரித்துள்ளது.

    மூச்சு விடாதே...நச்சுக்காற்று

    அடுத்த 10 அல்லது 20 ஆண்டுகளில், பூமியைச் சுற்றி உள்ள வளிமண்டல காற்றில் கலந்துள்ள கரியமில வயுவின் அளவு 450 PPM (Parts Per Million).....500PPM (Parts Per Million) என்ற மிக உயரிய அளவை அடைந்து, நாம் மற்றும் நம் சந்ததியர்கள் சாதாரணமாக சுவாசிக்க ஆக்சிஜன் சிலிண்டரை முதுகில் கட்டிக் கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட உள்ளோம். இத்தகைய மூச்சுக்காற்று அபாயத்தை தடுக்க வழிகள் இல்லையா என்பது தானே உங்கள் கேள்வி !!

    நச்சுகாற்றை குறைக்கும் வழிகள்

    இந்த உலகில் நச்சுகாற்றை குறைக்க இரண்டு தீர்வுகள்தான் உள்ளது. முதல் தீர்வு, நமது வசதி வாய்புகளை குறைத்துக்கொண்டு, கார் மற்றும் பைக்கில் செல்வதை விட்டு 250 ஆண்டுகளுக்கு முன், நம் முன்னோர்கள் வாழ்ந்த எளிமையான வாழ்க்கை முறையான குதிரைவண்டி, மற்றும் நடந்து செல்லும் சாதாரண வாழ்க்கையை நாம் வாழப் பழக் கொள்ள வேண்டும். இரண்டாவது தீர்வு, மரங்களை அதிக அளவில் வளர்த்து முறையாக பராமரிக்கப்படவேண்டும்.

    பூமியை குளிர்விக்க மரம் வளர்ப்பு

    இந்த இரண்டு தீர்வுகளில், முதல் தீர்வை நோக்கி, வசதி வாய்ப்புகளை அனுபவித்த நாமோ அல்லது இந்த உலகமோ செல்ல முடியாது. மேலும், இருக்கின்ற மரங்களையும் வாழ்க்கைத் தேவைக்காக வெட்டிக்கொண்டு இருக்கும் இந்த காலக்கட்டத்தில் மரம் வளர்ப்பு பூமியை குளிர்விக்கும் அளவிற்க்கு, அதுவும் உடனடியாக மரம் வளர்ப்பது சாத்தியமா ? என்ற கேள்வி நம்மிடையே எழுகிறது.

    மரம் வளர்ப்பா ? செடி வளர்ப்பா ?

    மரம் வளர்ப்புதான் இந்த பூமியை நாம் குளிர்விக்கும் முயற்சிக்கு ஒரே தீர்வு. ஆனால், ஒரு செடியை இன்று நாம் நட்டால், அது மரமாக வளர்ந்து முழு ஆக்சிஜன் பயன்தர 20 ஆண்டுகள் ஆகும். இன்று வைக்கும் மரங்களும், தெருவை அகலப்படுத்த....மழை...வெள்ளம்...புயல் பாதிப்பு என்று காணாமல் போக அதிக அளவு வாய்புக்கள் உள்ளது. மேலும், நகர் புறங்களில் மரம் வளர்க்க போதிய இட வசதி இல்லை. ஆதலான், செடி வளர்ப்போம்.....முறையாக துளசிச் செயியை வளர்ப்போம்..அந்த துளசி செடியை முறையாகப் பாதுகாப்போம்.

    துளசிச் செடி வளர்ப்பு...ஆக்சிஜன் புரட்சிக்கு அடித்தளம்....

    4க் அமைப்பின் தாரக மந்திரம் செடியை வளர்ப்போம்....துளசி செடியை வளர்ப்போம் அதுவும் ஒவ்வொரு வீட்டிலும் வளர்ப்போம்...பல அடுக்கு மாடி கட்டிடங்களின் மொட்டை மாடியில் வளர்ப்போம்...தூய ஆக்சிஜனைத் தினம் பெறுவோம். துளசி தனி மனித ஆரோக்கியத்திற்க்கும், உலக ஆக்சிஜன் வளத்திற்க்கும் உகந்தது என்பதை உணர்வோம்.

    ஒன்று கூடுவோம்...பூமித் தாயைக் காப்பாற்றுவோம்...

    ஊர்கூடி தேர் இழுத்தால்தான் தேர் ஓடும். எங்களுடைய இந்த இயற்கை துளசி வளர்ப்பு முன்மாதிரிப் பண்ணை, மாணவர்களிடையே ஆரோக்கிய வாழ்வு பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் முயற்சி மற்றும் துளசி வளர்ப்பின் மூலம் இந்த உலகத்தை குளிர்விக்க முடியும்.


வளங்கள்

    • மின் சிற்றேடு பதிவிறக்கம் …

    • பதிவிறக்கங்கள்

    • விளம்பரத் தொடர்புக்கு

    • கருத்து படிவம்

    • செய்திமடல் சந்தா

    • ஆய்வுகள்

    • புகைப்பட தொகுப்பு

    • காட்சிபதிவு தொகுப்பு

பொதுவானவை

  • அறிவிப்புகள்

  • கட்டுரைகள்

  • சிற்றேடுகள்

  • விளக்ககாட்சிகள்

  • ஒத்திகை

  • பெருநிறுவன கானொளி

துளசி...துளசி இணைப்புகள்

  • ஏழைகளின் ஆப்பிள் துளசி

  • திட்டங்கள்

  • சிந்தனைக்கு

  • துளசி திருமணம்

  • செய்திகளும், நிகழ்வுகளும்

  • மின் மடல்
Copyright ©2013  www.tulasitulasi.org
Total Visitors      Website counter
Privacy Policy |   Terms of Use |   Disclaimer