துளசி செடி பற்றிய ஆய்வு பல்வேறு இடங்களில் துளசியின் மருத்துவ குணங்கள் பற்றிய கோணங்களில் நடந்து வருகிறது. இவை தவிர துளசிசெடி மூலிகை மருத்துவத்திற்க்கும், துளசியின் அற்புத ஆய்விற்க்கும், துளசி செடி பயன்படுகிறது. இந்த அரிய வகை துளசியை ஆய்வுக்காக திருச்சி பாரதிதாசன் பொறியியல் கல்லூரி தாவரவியில், நுண்ணுயிரியல் பிரிவு எடுத்துக்கொண்டு சீரிய ஆய்வினை மேற்கொள்ள உள்ளது.
அதாவது, துளசி 15-20 மணிநேரம் ஆக்சிஜனை வெளியிடும் தாவரம் என்பது சரிதானா ? என்பதனை ஆய்வக முறையின் மூலம் கண்டறிந்து உண்மையை உலகுக்கு உறைக்க தயாராகிறது. இந்த அரியதொரு ஆய்வுக்கு துளசி...துளசி உலக பசுமை வளர்ச்சி குழுவின் நிறுவனர் வித்திட்டார் என்றால் அது மிகையாகாது.