Circles Theme

  
  • உறுப்பினர் பதிவு
  • புகுபதிவு
  • கேள்விகளும் பதில்களும்
  • Facebook
  • Google+
  • LinkedIn
  • RSS
  • Twitter
  • YouTube
  • முகப்பு
    • வரலாறு
    • துளசி ஓர் அற்புதம்
    • துளசியின் தனித்துவம்
    • துளசி அறிவியல்
    • 4G நோக்கமும், செயல்பாடுகளும்
    • பேண்தகைமை
    • சான்றுகள்
    • மைல்கற்கள்
  • துளசி வழி வாழ்க்கை
  • உலக பசுமை வளர்ச்சி குழு
    • சுருக்கமாக ஆங்கிலத்தில்
    • சுருக்கமாக - தமிழில்
    • பசுமை துளசி சங்கம்
  • 4G துளசி
    • 4G - e - புத்தகங்கள்
    • 4G - e - கையடக்க புத்தகம்
    • 4G - e - துண்டு பிரசுரம்
    • 4G - துளசி e சுவரொட்டிகள்
    • கையடக்க ஆவண வடிவம்
    • புத்தக காதலன்
  • குறுஞ்செய்திகள்
    • நிறுவனரின் வாரந்திர குறுஞ்செய்திகள்
    • நிறுவனரின் மாதாந்திர குறுஞ்செய்திகள்
    • இ - செய்திகள்
  • கொள்கைகள்
    • பாதுகாப்பு கொள்கை
    • கொள்கைகளின் தொகுப்பு
    • நம்பகமான கொள்கை
  • தொடர்புக்கு

ஏழைகளின் ஆப்பிள் துளசி

Home | ஏழைகளின் ஆப்பிள் துளசி

ஏழைகளின் ஆப்பிள் துளசி (மூலிகைகளின் ராணி துளசி):

மூலிகைகளின் ராணி என பெயர் பெற்ற துளசியை பயிரிடும் விவசாயிக்கு ஒரு ஹெக்டேருக்கு 6 ஆயிரம் தோட்டக்கலை துறை சார்பில் வழங்கப்படுகிறது.

வைட்டமின் ஏ, சி, கால்சியம் சத்துக்கள் அதிகளவில் இருக்கும் துளசியில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில் இருந்து கொசு விரட்டி, கிருமி நாசினி, தலைவலி, தொண்டைப் புண், அஜீண கோளாறு, வயிற்றுப்போக்கு மலேரியா போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கும் பல்வேறு மருந்துகள் தயாரிப்பதால் மூலிகைகளின் ராணி என்ற பெயர் துளசிச் செடிக்கு உண்டு.

நடவு முறை:பொதுவாக விதைகள் மூலம் துளசி உற்பத்தி செய்யப்படும். மேட்டுப் பாத்தியல் முறையில் விதைகள் தூவி நாற்றங்கால் அமைக்க வேண்டும். 8 முதல் 10 நாளில் விதை முளைத்து வரும். 6 வாரங்கள் தயாரான நாற்றுக்களை 40 செ.மீ. ஷ் 40 செ.மீ. என்ற இடைவெளியில் நடவு செய்து மாதத்துக்கு இரண்டு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.

இதற்கு மக்கிய தொழு உரம், மண்புழு உரம் மட்டுமே போதுமானது.அறுவடை: எல்லா வகை மண்ணிலும் வளரும் தன்மைக் கொண்ட துளசிச் செடியின் முதல் அறுவடை 90 முதல் 95 நாளிலும், அடுத்ததாக 60 முதல் 75 நாளிலும் அதை தொடர்ந்து ஆண்டுக்கு 3 முறை என்ற கணக்கில் அறுவடை செய்யலாம். எண்ணெய் எடுக்க அறுவடை செய்யும் போது பூக்கும் தருவாயில் அறுவடை செய்ய வேண்டும். அப்போது ஒரு ஹெக்டேருக்கு 2500 முதல் 3000 கிலோ வரை அறுவடை செய்ய முடியும்.திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலும் பூஜைகள், மாலை கட்டும் பலனுக்காக அறுவடை செய்யப்படுகிறது.

புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோயில்கள், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் சபரி மலை சீசனில் இம்மாவட்டத்தில் துளசியின் தேவை அதிகளவில் உள்ளது.பூஜை மற்றும் மாலை கட்ட பயன்படும் வகையில் அறுவடை செய்யப்படும் துளசி ஒரு கிலோ 25 வரை விற்கப்படுகிறது. எண்ணெய் மற்றும் மருத்துவ பயன்பாட்டுக்காக அறுவடை செய்யப்படும் துளசி கிலோ 40 வரை விற்கப்படுகிறது.

ஆனால் எண்ணெய் எடுக்கும் விதத்தில் துளசி பயிர்கள் வட இந்தியாவில் மட்டுமே அதிகளவில் அறுவடை செய்யப்படுகிறது.

தென் இந்தியாவில் எண்ணெய் பயன்பாடு அறுவடை மிகவும் குறைவாக உள்ளது.


வளங்கள்

    • மின் சிற்றேடு பதிவிறக்கம் …

    • பதிவிறக்கங்கள்

    • விளம்பரத் தொடர்புக்கு

    • கருத்து படிவம்

    • செய்திமடல் சந்தா

    • ஆய்வுகள்

    • புகைப்பட தொகுப்பு

    • காட்சிபதிவு தொகுப்பு

பொதுவானவை

  • அறிவிப்புகள்

  • கட்டுரைகள்

  • சிற்றேடுகள்

  • விளக்ககாட்சிகள்

  • ஒத்திகை

  • பெருநிறுவன கானொளி

துளசி...துளசி இணைப்புகள்

  • ஏழைகளின் ஆப்பிள் துளசி

  • திட்டங்கள்

  • சிந்தனைக்கு

  • துளசி திருமணம்

  • செய்திகளும், நிகழ்வுகளும்

  • மின் மடல்
Copyright © 2013 tulasi...tulasi
Privacy Policy |   Terms of Use |   Disclaimer