இன்று காலை 09.10.13 உலக பசுமை வளர்ச்சிக் குழுவின் நீண்ட நாள் கனவு நினைவானது.
பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கத்தில், ராயர் தோப்பில், ஸ்ரீரங்கம் கிளை உதயமாயிற்று.
திருமதி. கிருஷ்ணவேனி மதிவாணன் அவர்கள் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
திருமதி சரஸ்வதி, அற்புதமான கதவை வைத்ததுடன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியை 4G PRO மற்றும் ஸ்ரீரங்கம் 4G ஒருங்கினைப்பாளர் துளசி K. சீனிவாசன் அவர்கள் அற்புதமாக திட்டமிட்டு செயல் படுத்தினார்.
108 திவ்ய தேசத்தில் முதல் தேசமான ஸ்ரீரங்கத்தில் 09.10.13 ஆகிய இன்று ஒரு அற்புதமான நாள்.
துளசி அரும்பு விட்டு உள்ளது. வரும் காலத்தில் வளர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டியாக, அடிப்படையாக அமையும் என்பது தின்னம்.
ஸ்ரீரங்கத்தில் 4G அத்தியாயம் (புதிய கிளை) திருமதி. சரஸ்வதி அவர்கள் மூலம் 09.10.2013 அன்று காலை கடவுள் வாழ்த்து பாடல் பாடப்பட்டு துவங்கப்பட்ட நிகழ்வு.
09.10.2013 அன்று காலை ஸ்ரீரங்கம் புதிதாக இன்று தொடங்கப்பட்ட கிளையின் தலைவர் திருமதி. கிருஷ்ணவேணி சேகர் அவர்கள் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.
09.10.2013 அன்று காலை ஸ்ரீரங்கம் புதிதாக இன்று தொடங்கப்பட்ட கிளையில், திருமதி. சரஸ்வதி மற்றும் பொருளார் நிர்வாக நிலையை சீர்காக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டனர். திருமதி. சரஸ்வதி, 4G ஸ்ரீரங்கம் கிளையின் துணை தலைவர் அவர்கள். பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கத்தில் புது கிளையை கடவுள் வாழ்த்து பாடல் பாடி, இறைவழி பாடு நடத்தி கிளை தொடங்க வழிவகுத்தார். திருமதி. கிருஷ்ணவேணி மதிவாணன் அவர்களும் கடவுள் வாழ்த்து பாடல் பாடி, இறைவழி பாடு நடத்தி கிளை தொடக்க விழாவான இன்று (09-10-13) குத்துவிளக்கு ஏற்றினார். திருமதி. கிருஷ்ணவேணி மதிவாணன் அவர்களால், ஸ்ரீரங்கம் கிளை திறப்பு விழாவிற்க்கு வந்த அனைவருக்கும் துளசி தேநீர் வழங்கப்பட்டது.
4G தலைவர் திரு க. பாலசுப்பிரமணியன் அவர்கள் மலைகோட்டை மாநகர ஜுனியர் சேம்பர் தலைவர் திரு. சிவராமன், மாம்பலச் சாலையைச் சேர்ந்த Jc. அமர்நாத் ஆகியோருடன் 1000க்கும் அதிகமான துளசி இளங்கன்றுகளை லாரியிலிருந்து இறக்கினார். இதன் காட்சி படம் இதோ... இங்கே நாம் காணும் புகைப்படம் எடுத்தது துளசி திரு. ஸ்ரீதர் அவர்கள். துளசி திரு. ஸ்ரீதர் அவர்கள் பசி நோக்காது...கண் துஞ்சாது....கருமமே கண்ணாயினார்.
4G துளசி அமைப்பின் கூட்டம் தஞ்சாவூர் ஸ்டார் ரெசிடென்சியில் நடைபெற்றது. ஹோட்டல் வாயிலில் துளசி செடியை கையில் ஏந்தியவாறு உலக மக்கள் அனைவரும் உலகம் வெப்பமயமாதலை தடுப்பது பற்றிய விழிப்புணர்ச்சியை, உலக பசுமை வளர்ச்சி குழு நிறுவனரின் மகன் மாஸ்டர். க. பா. தருண் கிருஷ்ணா அவர்கள் ஏற்படுத்துகிறார். அவருடன் சேர்ந்து நாமும் உலக வெப்பமயமாதலை தடுக்க முற்படுவோம்...