உலக பசுமை வளர்ச்சி குழு (Global Green Growth Group) தொடங்கப்பட்டதன் நோக்கம் யாதெனில், வளி மண்டலத்தில் பரவியுள்ள கரிய-மில-வாயுவின் ஆதிக்கத்தை அறவே குறைத்து ஆக்சிஜன் ஆக்கிரமிப்பு வழி காணுவதே !!!
இதற்க்கு தாவர வகையில் துளசி செடி (மூலிகையின் அரசி), அடிப்படையாக விளங்குகிறது. துளசி செடியானது தாவர வகைகளிலேயே அதிலும் குறிப்பாக செடி வகைகளில் அதிக அளவு ஆக்சிஜனை வெளியிடும் தாவரம் ஆகும். மற்ற செடிகளை போல் அல்லாது துளசி செடி ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 15 முதல் 20 மணி நேரமாவது ஆக்சிஜனை வெளியிடும் தாவரமாக விளங்குகிறது.
இந்த அரிய துளசி செடியை உலக மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்கள், அலுவலகங்கள், வீதிகள், பொது இடங்கள், வணிக வளாங்கள், பூங்காக்கள், மக்கள் கூடும் முக்கிய இடங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் வளர்த்து வளிமண்டலத்தில் காற்று மாசுபடுதலை அறவே தடுத்து, தூய்மையான காற்றை சுவாசித்து என்றும் இன்புற வாழ எங்களுடைய உலக பசுமை வளர்ச்சி குழு உங்களுக்கு என்றும் துணைநிற்க்கும்.
துளசி செடி வளர்ப்பு அதன் பயன் ஆகியவற்றை சுவாசமாக கொண்டு உலக பசுமை வளர்ச்சி குழு தன் பார்வையை உலகளாவிய அளவு விரித்து, தன் பயனத்தை உலக மக்கள் நன்மைக்காக மேற்கொள்கிறது.