துளசியின் அற்புதம் - என்ற புத்தகம் வளிமண்டலத்தை துளசி மூலமாக காக்கும், தனி மனித ஆரோக்கியத்தை மாற்றும் முயற்சியின் முதற்படி, உலகத்தில் அனுதினமும் பல நூல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அவற்றுள் சில மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அதிலும் விரல் விட்டு எண்ணக்கூடிய சில நூல்கள் மட்டும் மக்களால் வாழ்க்கை முறையாக பின்பற்றப்படுகிறது. இதில் இந்த துளசியின் அற்புதம் என்ற நூலும் அமையும் என்று உறுதியாக நம்புகிறோம்.
வீட்டுக்கு வீடு துளசி வளர்ப்போம் என்பது ஏட்டு அளவில் இல்லாமல், மூலிகையின் அரசியான துளசியை எப்படி வாழ்க்கையின் அங்கமாகவே மாற்றி ஒவ்வொரு இல்லத்தரசியையும் ஒரு மூலிகை மருத்துவராக மாற்ற வேண்டும் என்ற பரந்த நோக்கில் ஆசிரியர் துளசி. க. பாலசுப்பிரமணியன் பல கோணங்களில் துளசியின் பயன்பாடுகளை அலசி ஆராய்ந்து நமக்கு பழரசமாக கொடுத்துள்ளார்.
இந்த புத்தகம் துளசி. க. பாலசுப்பிரமணியனின் பல ஆண்டு கால தியான வாழ்க்கை, யோகக்கலை ஆராய்ச்சியின் விளைவு என்பதை புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தை படிக்கும் போதும் நம்மால் உணர முடியும்.
இப்புத்தகத்தை ஒரு முறை படித்துவிட்டு கீழே வைத்து விடாமல், நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து......சிந்தித்து துளசியின் மகிமையைப் பற்றி தெரிந்து கொண்டு, நம் ஆரோக்கிய வாழ்க்கை நம் கையில் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு வாழ்க்கையின் இறுதி காலம் வரை ஆரோக்கியம் காத்து, அற்புதமான் பூமியை நம் சந்ததியர் நலமுடன் அனுபவிக்க விட்டு செல்வோம்......
என்றும் துளசி வழியில்,
துளசி. திரு. சுவாமிநாதன் (இண்டர்நேசனல் புக்ஸ்) அவர்கள், துளசி ஸ்ரீதர் அவர்கள்.