Circles Theme

  
  • உறுப்பினர் பதிவு
  • புகுபதிவு
  • கேள்விகளும் பதில்களும்
  • Facebook
  • Google+
  • LinkedIn
  • RSS
  • Twitter
  • YouTube
Circles Theme
  • முகப்பு
    • வரலாறு
    • துளசி ஓர் அற்புதம்
    • துளசியின் தனித்துவம்
    • துளசி அறிவியல்
    • 4G நோக்கமும், செயல்பாடுகளும்
    • பேண்தகைமை
    • சான்றுகள்
    • மைல்கற்கள்
  • துளசி வழி வாழ்க்கை
  • உலக பசுமை வளர்ச்சி குழு
    • சுருக்கமாக ஆங்கிலத்தில்
    • சுருக்கமாக - தமிழில்
  • 4G துளசி
    • 4G - e - புத்தகங்கள்
    • 4G - e - கையடக்க புத்தகம்
    • 4G - e - துண்டு பிரசுரம்
    • 4G - துளசி e சுவரொட்டிகள்
    • கையடக்க ஆவண வடிவம்
    • புத்தக காதலன்
  • குறுஞ்செய்திகள்
    • நிறுவனரின் வாரந்திர குறுஞ்செய்திகள்
    • நிறுவனரின் மாதாந்திர குறுஞ்செய்திகள்
    • இ - செய்திகள்
  • கொள்கைகள்
    • பாதுகாப்பு கொள்கை
    • கொள்கைகளின் தொகுப்பு
    • நம்பகமான கொள்கை
  • தொடர்புக்கு

துளசியின் அற்புதம்

Home | துளசியின் அற்புதம்

துளசியே ஓர் அற்புதம் தான். அந்த அற்புத துளசியின் அளவிடற்கரிய அற்புதங்கள் இதோ....

துளசியின் அற்புதம்

துளசி இயற்கை நமக்கு அளித்துள்ள ஒரு உன்னதமான பொக்கிஷம். நாங்கு துளசி இலையை ஒருவர் தினமும் நன்றாக மென்று, தின்று வந்தால் எந்த வொரு நோயும் வராமல் ஒருவர் ஆரோக்கியமாக வாழ முடியும் என்பது நம் முன்னோர்கள் கண்ட உண்மை.

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆன்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல.

துளசியின் இனங்கள்: நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்)

துளசி தோட்டம், சிறியதாக சேலம் அலுவலகத்தில் நடைபாதையின் இரு மருங்கிலும் மிக அழகாக காட்சி தருகிறது. ஆம் உலக பசுமை வளர்ச்சி குழுவின் செயல்பாடுகள்....சேலத்தில் கால் ஊன்றி அருமையாக வளர்த்து கொண்டு இருக்கிறது என்பதை இந்த சிறு தோட்டம் பறை சாற்றுகின்றது.







  • + -

    மேலும்...







    "முயற்சி திருவினையாக்கும்...முயற்சியின்மை....யின்மை புகுத்திவிடும்"

    பை - 1 (இடது புறம்): துளசி விதை நேரடியாக மண்ணில் விதைத்து வளரும் காட்சி

    பை - 2 (வலது புறம்): துளசி விதை...விதை நீர்த்தி செய்யப்பட்டு, அதாவது துளசி விதை 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பிறகு மண்ணில் விதைத்து பின் அந்த துளசி செடி நன்றாக வளர்ந்து வரும் கண்கொள்ளாக் காட்சி.




    பயன் தரும் பாகங்கள்

    இலை, தண்டு, பூ, வேர் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை.

    பயன்கள்

    தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்கள். துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம். இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது. துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது. வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு. இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.

    இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறு 5மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர பசியை அதிகரிக்கும். இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும். சளியை அகற்றும், தாய்பாலை மிகுக்கும். இலை கதிர்களுடன் வாட்டி பிழிந்த சாறு காலை மாலை 2 துளி வீதம் காதில் விட்டு வர 10 நாட்களில் காது மந்தம் தீரும். விதைச் சூரணம் 5 அரிசி எடை தாம்பூலத்துடன் கொள்ள தாது கட்டும். மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது. தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

    துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.

    துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது.

    துளசியின் உன்னதத்தை உணர்ந்த நம் முன்னோர்கள் துளசியை ஒரு தெய்வீக மூலிகையாக ஒவ்வொரு வீட்டிலும் வளர்த்து வந்தனர். துளசி தன் வளர்ச்சிக்காக கார்பன்-டை-ஆக்சைடினை சுவாசித்து ஒவ்வொரு நாளும் 20 மணி நேரம் ஆக்சிஜனையும், 4 மணி நேரம் ஓசோனையும் வெளியிடும் ஒரு அற்புதத் தாவரமாகும்.

    இதனால் துளசி செடி இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் தூய்மையான காற்றோட்டம் இருக்கும். தூய்மையான காற்றோட்டம் இருக்கும் வீடுகளில் பிராண வாயு அற்புதமாக இருக்கும். நல்ல பிராணவாயு உள்ள வீடுகளில், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் உடல் நலம் மேம்படும். துளசி தனி மனித உடல் ஆரோக்கியம் மற்றும் உள்ள ஆரோக்கியத்திற்க்கு அடிகோலும். துளசி தனிமனிதனின் உள்ள ஆரோக்கியம், நல்ல சிந்தனை மற்றும் ஆன்மீகம் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும், என நம் முன்னோர்கள் கண்டு பிடித்த ஒரு அற்புதமான விசயமாகும்.

    இன்றைய மருந்து வழி வாழ்க்கை:

    நம் நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் கடந்த 50 ஆண்டுகளில் விரைவான கால நீரோட்ட்டத்தில் இந்திய மூலிகையில் இருந்து மேலை நாட்டு மோகத்தில் ஆங்கிலேய மருந்து முறைக்கு மாறி விட்டனர். "உணவே மருந்து" என்று இருந்த இந்தியன் "மருந்தே உணவு" என்ற படுகுழியில் தள்ளப்பட்டுள்ளான். தேவை இக்கணம் நம் இந்திய பாரம்பரிய வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வு.

    துளசி வழி வாழ்க்கை:

    ஒன்றைப் பற்றி.....ஒன்றையே நினைத்து....ஒன்றிலே வாழ்வது தான் அர்த்தமுள்ள வாழ்க்கை. துளசியை பற்றி...துளசியைப் பற்றியே அனுதினமும் நினைத்து....துளசி வழி வாழ்க்கையை அமைத்து கொண்டு வாழ்வதே உயரிய வாழ்க்கை என்பதை நம்மில் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

    தனி மனித மாற்றமே உலக மாற்றம்,
    தனி ஒரு மனிதனின் துளசி வழி வாழ்க்கையே....
    உலக வளி மண்டல ஆரோக்கியத்தின் அடிப்படையாகும்.

    தனி மனித ஆரோக்கியத்திற்க்கு.....துளசி
    குடும்ப ஆரோக்கியத்திற்க்கு....துளசி
    சமுதாய ஆரோக்கியத்திற்க்கு....துளசி
    வளிமண்டல ஆரோக்கியத்திற்கு...துளசி


வளங்கள்

    • மின் சிற்றேடு பதிவிறக்கம் …

    • பதிவிறக்கங்கள்

    • விளம்பரத் தொடர்புக்கு

    • கருத்து படிவம்

    • செய்திமடல் சந்தா

    • ஆய்வுகள்

    • புகைப்பட தொகுப்பு

    • காட்சிபதிவு தொகுப்பு

பொதுவானவை

  • அறிவிப்புகள்

  • கட்டுரைகள்

  • சிற்றேடுகள்

  • விளக்ககாட்சிகள்

  • ஒத்திகை

  • பெருநிறுவன கானொளி

துளசி...துளசி இணைப்புகள்

  • ஏழைகளின் ஆப்பிள் துளசி

  • திட்டங்கள்

  • சிந்தனைக்கு

  • துளசி திருமணம்

  • செய்திகளும், நிகழ்வுகளும்

  • மின் மடல்
Copyright ©2013  www.tulasitulasi.org
Total Visitors      Website counter
Privacy Policy |   Terms of Use |   Disclaimer