மேலும்... 4G குழுவின் நோக்கம் 4G என்ற எங்களது உலக பசுமை வளர்ச்சிக் குழுவின் நோக்கம் அறைக்கு அறை ...வீட்டுக்கு வீடு...வீதிக்கு வீதி...ஊருக்கு ஊர்....நாட்டுக்கு நாடு, துளசிச் செடிகளை வளர்த்து உலகத்திற்க்கு ஆக்சிஜனை அதிக அளவில் அளிக்க முயல்வதுதான். தனிமனித ஆரோக்கியத்தை பாதுகாத்து, உலக ஆக்சிஜன் அளவை பெருக்குவதுதான் எங்கள் 4G குழுவின் நோக்கம். தனி மனித மாற்றமே....உலக மாற்றம்....உரக்க சிந்திப்போம்.....துளசிசெடி வளர்ப்பின் மூலம் ஒவ்வொரு வீட்டையும் ஆக்சிஜன் தொழிற்சாலையாக மாற்றுவோம். செயற்கை துளசி....இயற்க்கை துளசி இன்று நம்மிடையே உள்ள துளசி......ஒரு செயற்கை துளசி....நமது பாரம்பரிய துளசியில் இருந்து பெரிய அளவில் மாறுதல் ஏற்பட்டுவிட்டது. காரணம் மருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள். இந்த நடைமுறையின் ஆபத்தை உணர்ந்து, இந்திய பாரம்பரிய துளசியின் மகிமையை போற்றி பாதுகாக்கும் நோக்கோடு 4G குழு திருச்சி, துறையூர், பெருமாள் மலை (தென் திருப்பதி) அடிவாரத்தில் 1.18 ஏக்கர் நிலப்பரப்பில், இயற்கை முறையில் துளசியை வளர்க்கும் உன்னத முயற்சியில் இறங்கி உள்ளது. ஐந்தில் துளசி...ஐம்பதில் துளசி உலகின் இந்த முன்மாதிரி 'இயற்கை துளசி' பண்ணையை அமைக்கும் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. வரும் 2013 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் அல்லது மே மாத முதல் வாரத்தில் இருந்து மாதம் ஒரு இலட்சம் இயற்கை துளசி கன்றுகளை, இந்த உலகத்தை குளிர்விக்கும் முன்மாதிரியாக எங்களது 4G அமைப்பு தமிழகத்தில் இயற்கை துளசி கன்றுகளை, இந்த உலகத்தை குளிர்விக்கும் முன்மாதிரி முயற்சியாக, எங்களது 4G அமைப்பு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தொடங்கப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக அளிக்கும் உயரிய சேவையை செய்ய உள்ளோம். ஒன்று கூடுவோம்...பூமித் தாயைக் காப்பாற்றுவோம்... ஊர்கூடி தேர் இழுத்தால்தான் தேர் ஓடும். எங்களுடைய இந்த இயற்கை துளசி வளர்ப்பு முன்மாதிரிப் பண்ணை, மாணவர்களிடையே ஆரோக்கிய வாழ்வு பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் முயற்சி மற்றும் துளசி வளர்ப்பின் மூலம் இந்த உலகத்தை குளிர்விக்க முடியும். இது ஒரு முடிவில்லா பயணம்.......ஆனால், இந்த துளசி பயணத்தில் அர்த்தம் உள்ளது.