திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரும் சனிக்கிழமை - 21/02/15 காலை 4G குழுவின் துளசி தோட்டம் 200 துளசி செடிகளை கொண்டு நடப்படுகிறது.
இதே மாதம் 25/02/2015 புதன் கிழமை காலை முப்பெரும் விழா திட்டமிடப்பட்டுள்ளது
செயற்கை கிரிக்கெட் மைதானம் - DJ Automobiles திரு, வெங்கடேசன் அவர்கள் தன் சொந்த செலவில் வலை பயிற்சி மைதானம் (ரூபாய் 4.5 லட்சம்) திறக்க உள்ளார்.
இறகு பந்து விளையாட்டு மைதானம் - செயலாளர் திரு. M.S.Nandakumar அவர்கள் அனுமதியின் பேரில் செயல்வடிவம் பெற்று திறக்கப்படஉள்ளது.
துளசி மூலிகை தோட்டம் - 200 துளசி செடிகளை கொண்டு 4G குழுவின் நிறுவனர் தலைவர் திரு. துளசி. க. பாலசுப்பிரமணியன் அவர்களால் துளசி தோட்டம் நடப்படுகிறது.
வாழ்க்கையில் மிக முக்கிய சாதனையான நாள், நிகழ்வுகளை காண துளசி உங்களை இந்த இணையதள வீடியோ பக்கத்திற்க்கு வரவேற்க்கிறது.
வரும் புதன் கிழமை வாழ்க்கையின் மிக முக்கிய நாளாக கருதப்படுகிறது.
4G குழுவின் சீரிய கண்காணிப்பில், தொலை நோக்கு பார்வையில், நேரடி பணியில் திருச்சி ஸ்ரீரங்கம் பள்ளியில் துளசி தோட்டம் என்பது பெருமைக்குரிய செயலாக 4G குழு கருதுகிறது.
வரும் காலத்தில் திருச்சியில் உள்ள மற்ற பள்ளி, கல்லூரிகள் மட்டுமல்லாது, தமிழகதில் உள்ள அனைத்து இடங்களிலும் இந்த துளசி தோட்டம் அமைக்க இந்த 4G குழு பாடுபடும்.
நம்முடைய வெகுநாள் ஏக்கம் நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை.
இந்த பள்ளியின் 1981 ஆம் ஆண்டில் படித்த மாணவர்கள் நம் துளசி தோட்டம் அமைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.
இந்த செய்தியை படித்த கூட்டத்தோடு அல்லாமல் நாமும் இந்த அரிய பணியில் நம்மை அர்ப்பணிப்போமாக ! ! !
திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் லயன்ஸ் கிளப் ஆண்டுவிழா 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதியில் நடத்தப்பட்டது. 140க்கும் மேற்பட்ட கிளைகுழு சார்பாக (லயன்ஸ் கிளப்) நடத்தப்படும் இந்த விழாவில், உலக பசுமை வளர்ச்சிக்குழுவின் நிறுவனர் என்ற முறையில் துளசி திரு. க. பாலசுப்பிரமணியன் அவர்களின் துளசி விழிப்புணர்வு, தேவை பற்றிய உரை 330 மாணவர்கள் 200 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், 25க்கும் மேற்பட்ட லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டது. 28 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட இந்த பள்ளியில் துளசி நிறுவனர் உலக மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆற்றிய உரை வரலாற்று சிறப்புமிக்கது.
நன்றியுடன், துளசி. திரு. க. பாலசுப்பிரமணியின் உலக பசுமை வளர்ச்சி குழு நிறுவனர். திருச்சி.