ஒன்றைப் பற்றி.....ஒன்றையே நினைத்து....ஒன்றிலே வாழ்வது தான் அர்த்தமுள்ள வாழ்க்கை. துளசியை பற்றி...துளசியைப் பற்றியே அனுதினமும் நினைத்து....துளசி வழி வாழ்க்கையை அமைத்து கொண்டு வாழ்வதே உயரிய வாழ்க்கை என்பதை நம்மில் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

தனி மனித மாற்றமே உலக மாற்றம்,
தனி ஒரு மனிதனின் துளசி வழி வாழ்க்கையே....
உலக வளி மண்டல ஆரோக்கியத்தின் அடிப்படையாகும்.

தனி மனித ஆரோக்கியத்திற்க்கு.....துளசி
குடும்ப ஆரோக்கியத்திற்க்கு....துளசி
சமுதாய ஆரோக்கியத்திற்க்கு....துளசி
வளிமண்டல ஆரோக்கியத்திற்கு...துளசி

துளசியே ஓர் அற்புதம் தான். அந்த அற்புத துளசியின் அளவிடற்கரியது.

 • + -

     மேலும்...


  முன்னோர்களின் துளசி வழி வாழ்க்கை:

  துளசியின் உன்னதத்தை உணர்ந்த நம் முன்னோர்கள் துளசியை ஒரு தெய்வீக மூலிகையாக ஒவ்வொரு வீட்டிலும் வளர்த்து வந்தனர். துளசி தன் வளர்ச்சிக்காக கார்பன்-டை-ஆக்சைடினை சுவாசித்து ஒவ்வொரு நாளும் 20 மணி நேரம் ஆக்சிஜனை அதிகமாக வெளியிடும் ஒரு அற்புத தாவரம் ஆகும்.
  இதனால் துளசி செடி இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் தூய்மையான் காற்றோட்டம் இருக்கும். தூய்மையான காற்றோட்டம் இருக்கும் வீடுகளில் பிராணவாயு அதிகமாக இருக்கும். நல்ல பிராணவாயு உள்ள வீடுகளில் உள்ள அனைவரின் உடல் நலம் மேம்படும். தனிமனிதனின் உடல் ஆரோக்கியம் மற்றும் உள்ள ஆரோக்கியம் மேம்படும், நல்ல சிந்தனை மற்றும் ஆன்மீக உணர்வுக்கு அடிப்படையாக துளசி வளர்ப்பு அமையும்.

  மரம் வளர்ப்பா ? செடி வளர்ப்பா ?

  மரம் வளர்ப்புதான் இந்த பூமியை நாம் குளிர்விக்கும் முயற்சிக்கு ஒரே தீர்வு. ஆனால், ஒரு செடியை இன்று நாம் நட்டால், அது மரமாக வளர்ந்து முழு ஆக்சிஜன் பயன்தர 20 ஆண்டுகள் ஆகும். இன்று வைக்கும் மரங்களும், தெருவை அகலப்படுத்த....மழை...வெள்ளம்.. .புயல் பாதிப்பு என்று காணாமல் போக அதிக அளவு வாய்புக்கள் உள்ளது. மேலும், நகர் புறங்களில் மரம் வளர்க்க போதிய இட வசதி இல்லை. ஆதலான், செடி வளர்ப்போம்.....முறையாக துளசிச் செயியை வளர்ப்போம்.. அந்த துளசி செடியை முறையாகப் பாதுகாப்போம்.

  துளசிச் செடி வளர்ப்பு...ஆக்சிஜன் புரட்சிக்கு அடித்தளம்....

  4G அமைப்பின் தாரக மந்திரம் செடியை வளர்ப்போம்....துளசி செடியை வளர்ப்போம் அதுவும் ஒவ்வொரு வீட்டிலும் வளர்ப்போம்...பல அடுக்கு மாடி கட்டிடங்களின் மொட்டை மாடியில் வளர்ப்போம்...தூய ஆக்சிஜனைத் தினம் பெறுவோம். துளசி தனி மனித ஆரோக்கியத்திற்க்கும், உலக ஆக்சிஜன் வளத்திற்க்கும் உகந்தது என்பதை உணர்வோம்.

  துளசியின் மகிமை

  உலகத்திலேயே 24 மணிநேரமும் சுவாசிக்கும் ஒரே தாவரம், துளசிச் செடி மட்டும்தான். துளசிசெடி 24 மணி நேரமும் கரியமில வாயுவை காற்றில் இருந்து எடுத்துக் கொண்டு தூய ஆக்சிஜனை நமக்கு கொடுக்கும் ஒரு உன்னதமான தாவரம். துளசியின் மகத்துவத்தை உணர்ந்த நமது முன்னோர்கள், 5000 வருடங்களுக்கு முன்னரே துளசியை வீடுகளில் வளர்த்து, வழிபட்டும் இருந்துள்ளார்கள். நாங்கு துளசி இலையை தினம், தினம் உண்டு வந்தால் வியாதி நம்மை அண்டாது, என்பது நம் முன்னோர்கள் கண்ட உண்மை.

  Benefits of drinking water in Copper vessel.

  தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும் நம்பிக்கையாகும். பானை அல்லது குடம் வடிவத்தில் உள்ள தாமிர பாத்திரத்தில் நம் தாத்தா பாட்டி தண்ணீர் பருகுவதை நாம் கண்டிருப்போம். தாமிர பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரால் கிடைக்கும் உடல் நல பயன்களை பெறுவதற்கு பலரும் தண்ணீரை தாமிர கோப்பையில் நிரப்பி பருகுகின்றனர். ஆனால் இந்த நம்பிக்கையில் அறிவியல் சார்ந்த உண்மை ஏதேனும் உள்ளதா என்று பார்ப்போம்.

  இந்திய பண்பாட்டின் படி, தாமிர பானையில் இருந்து தண்ணீர் குடிப்பது ஆயுர்வேதத்தின் அடிப்படையாகும். ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியல் டி, உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான கபம, பித்தம, மற்றும் வஆதம் போன்றவற்றை சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவுகிறது. அதனால் தாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால், உங்கள் உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும்.

  அறிவியலின் பார்வையில், தாமிரம் என்பது உடலுக்கு தேவையான தாமிரமாகும். இதுப்போக, தண்ணீர் மக்கி போகாமல் இருக்க தாமிரம் ஒரு எலெக்ட்ரோலைட்டாக செயல்படும். அதனால் தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீர், நாட்கணக்கில் நற்பதத்துடன் விளங்கும். தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீரை பருகுவதனால் கிடைக்கும் பல்வேறு உடல்நல பயன்கள் கீழ்வருமாறு:

  தாமிர பாத்திரத்தில் தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் 10 நன்மைகள்

  தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை ஒழிக்கும் குணத்தை கொண்டுள்ளது தாமிரம். முக்கியமாக வயிற்று போக்கினால் உண்டாகும் ஈ-கோலி போன்ற பாக்டீரியாக்களுக்கு எதிராக இது சிறப்பாக செயல்படும். அதனால் தாமிர பானையில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் இயற்கையாகவே சுத்தமானவையாக இருக்கும்.

  தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும்

  தாமிரம் என்பது அரியக் கனிமமாகும். தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.

  கீல்வாத வலியை குணப்படுத்தும்

  தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.

  புண்களை வேகமாக குணப்படுத்தும்

  புதிய அணுக்களை உருவாக்கி அதனை வேகமாக வளரச் செய்ய தாமிரம் உதவும். இதனால் புண்கள் வேகமாக குணமாகும். இதிலுள்ள வைரஸ் நீக்கி மற்றும் பாக்டீரியா நீக்கி குணங்கள் தொற்றுக்களின் வளர்ச்சியை தடுக்கும்.

  மூளை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்

  மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளை பாதுகாக்க மயலின் உறைகள் அதனை மூடும். இந்த மயலின் உறைகளை உருவாக்க கொழுப்பு வகைப் பொருட்களை தொகுக்க தாமிரம் உதவுகிறது. இது போக வலிப்பு வராமலும் அது தடுக்கும்.

  செரிமானத்தை மேம்படுத்தும்

  வயிற்றை மெதுவாக சுருக்கி விரிவாக்க ஊக்குவிக்கும் அறிய குணத்தை தாமிரம் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். அதனால் தான் தாமிரம் கலந்துள்ள தண்ணீரை பருகினால் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெற்றிடலாம்.

  இரத்த சோகையை எதிர்க்கும்

  நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும்.

  கர்ப்ப காலத்தின் போது:

  கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.

  புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும்

  தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும்

  வயதாகும் செயல்முறை குறையும்

  தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்