4G குழு தொடங்கப்பட்ட கடந்த 14 மாதங்களில் சாதனைகள்,
* துறையூரில் அமைதி பேரணி நடத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியது,
* பல்லாயிரம் பேர் கூடும் திருமண வைபவங்களில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் துளசி செடி வழங்கி அதன் மகத்துவத்தை ஒவ்வொருவருக்கும் எடுத்து கூறியது.
* 20க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் காற்றில் கலந்திருக்கும் பேராபத்துபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது...
* பள்ளிகளில், கல்லூரிகளில் மரக்கன்றுகள், துளசிசெடி நட்டது.
* தினசரி பத்திரிக்கைகள் மூலம் உலக மக்களிடையே கரிய-மில-வாயுவினால் ஏற்படும் பேராபத்து பற்றிய தீவிர விளக்கமளித்து அவர்கள் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் ஆக்கிரமிப்புக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக விளக்கியது....
* வார, மாத பத்திரிக்கைகள் மூலம் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் துளசி செடி வளர்ப்பின் அவசியத்தை உணர்த்தியது.
* கூரிய தொலைநோக்கு பார்வையினால் அரசாங்கத்தின் பார்வைக்கே துளசி மகத்துவத்தை கொண்டு சென்றது.
* ஒவ்வொரு வருடமும் பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கத்தில் (திருச்சி மாவட்டம்) நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்வுகளில் பல லட்சகணக்கான மக்களுக்கு துளசி தீர்த்தம் வழங்கியது....